பதிப்புரை

வணக்கம்!!!

கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" கதையை சுருக்கும் முயற்சியில் நான் ஈடுபடக் காரணம் ...

'சிறகு' இணைய இதழில் (http://siragu.com/?p=2790) ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர். திரு. க.பூரணச்சந்திரன் அவர்களின் நேர்முகக் காணல் ஒன்றில் அவர் இதற்கு யாராவது முயற்சி செய்தால் நல்லது எனக் குறிப்பிட்டிருந்தார்.  இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னாள்  தமிழ்த்துறை தலைவராக இருந்தவர் என்று இணையத்தில் படித்த தகவல்கள் மூலம் அறிகிறேன். கல்கி எழுத்துக்களிலேயே, அவர் எழுத்து நடை அழகை சிதைக்காதவாறு அவர் கதையை சுருக்க முயன்றேன்.  

சிறகு இதழில் திரு.க.பூரணச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கவும்  .....




சமீபத்தில் 2216 பக்கங்களில் விகடன் பிரசுரம் வெளியிட்ட மூலக்கதையை 150 (!!!) பக்கங்களில் சுருக்க அவர் பரிந்துரை செய்கிறார்.  ஆனால் அது இயலாத செயலாகத் தோன்றுகிறது.  எனது குறிக்கோள் ஆறில் ஒரு பகுதியாக 16 அல்லது 18 சதவிகிதமாக, 400 பக்கங்களுக்குள்  சுருக்குவது. எனவே கதையோட்டத்தில் இருந்து விலகிச் செல்லும் நிகழ்சிகளையும், மையக் கருத்தில் இருந்து விலகிச் செல்லும் பாத்திரங்களின்பகுதிகளையும், அளவுக்கு மீறிய வர்ணனைகளாக நான் (?) கருதுவதையும் நீக்கியுள்ளேன்.







ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.கே. சுப்பிரமணியன் அவர்களும், ஆர். கற்பகம் அவர்களும் சுருக்கிய பதிப்பை வெளியிட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.  அவற்றின் தாக்கம் இல்லாமல் செய்ய விரும்பியதால் அவற்றைப் படித்துப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.    சுருக்கிய பதிப்பை அனைவரும் இணையத்தின் வழி படிக்கவழி செய்வதே   என் முயற்சியின் குறிக்கோள்.

No comments: